வடசென்னை வாழ்வியலை சொல்லும் N4

சென்னை: மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி நடித்துள்ள படம், ‘N4’. தர்மராஜ் பிலிம்ஸ், எல்லைக்கு அப்பால் கிரியேஷன்ஸ் சார்பில் நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார் தயாரித்துள்ளனர். எஸ்.திவ்யாங்க் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பாலசுப்ரமணியன் இசை அமைக்கிறார். லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: வடசென்னை வாழ்வியலை யதார்த்தமாகச் சொல்லும் கதை என்றாலும், கிளைமாக்சில் நாங்கள் சொல்லும் விஷயம் புதிதாக இருக்கும்.

மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் அஃப்சல் ஹமீது, வினுஷா தேவி ஜோடியின் நடிப்பு பேசப்படுவதாக இருக்கும். வடிவுக்கரசி சீனியர் நடிகையாக இருந்தாலும், காசிமேடு பகுதியிலுள்ள மீனவர் குப்பத்துக்கு வந்து, அங்குள்ள ஜனநெரிசல் மிகுந்த சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்தார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது. முன்னதாக அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் சம்பந்தப்பட்ட லொகேஷனில் ஒர்க்‌ஷாப் நடத்தப்பட்டது. ரிகர்சல் பார்த்துவிட்டு படப்பிடிப்புக்குச் சென்றதால், அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தனர்.

Related Stories: