தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரி வழக்கு: ஒன்றியஅரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  ஒன்றிய அரசு, செம்மொழியான தமிழ்மொழிக்கும் அதைப் போன்ற தேசிய கவுன்சிலை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜெகநாத் ஆஜராகி, உலகின் மிக தொன்மையான மொழி தமிழ்மொழிதான். செம்மொழி அந்தஸ்தை பெற்ற மொழி. இந்த பழமையான மொழியின் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சிலை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: