திருவாரூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கிராமத்தினர் உத்திரகிரி மற்றும் படத்திறப்பு பத்திரிகையை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராமத்தினர் யாசகமெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று விவசாயி உருவ பொம்மைக்கு ஈமச்சடங்கு செய்யும் விதமாக உத்திரகிரியை படத்திறப்பு பத்திரிகையை அடித்து சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: