விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

டெல்லி: விழுப்புரத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு தங்கியிருந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆசிரமத்தை நடத்தி வந்தவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் தொடர்பான விவகாரத்தில் நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும்,

இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கியிருந்தால் அதுகுறித்த விவரங்களையும் வழங்க வேண்டும், மேலும் தமிழ்நாடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணையாக நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: