இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3177 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,776 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,55,119ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220,64,34,000 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,349 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: