நாகாலாந்து, திரிபுரா மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாகாலாந்து, திரிபுரா மாநிலத்தில் புதிதாக பதவியேற்கும் அம்மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: நாகாலாந்து மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நைபியு ரியோவுக்கும், திரிபுரா மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள  டாக்டர் மாணிக் சாகாவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் இருவருடைய பதவிக்காலம் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக விழுமியங்களால் வழிநடத்தப்பட்டு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: