சென்னை:கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ‘வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்தது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் கே.சுப்புராயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
