புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் 5.28 லட்சம் பேருக்கு கல்வி: வயது வந்தோர் கல்வி இயக்குநர் தகவல்

சென்னை: தமிழ்நாடு வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி கூறியதாவது: அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 14வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு  கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில்  சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்  எழுதறிவு  கற்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ெதாடங்கி வைத்தார்.

அப்போது 4 லட்சத்து 50 ஆயிரம் பேரை இந்த திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 5 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக 28 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் தினமான இன்று பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் ஜூன் மாதம்  இந்த திட்டத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இணைத்து கல்வி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.

Related Stories: