மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் பள்ளியில் சித்த மருத்துவ நிறுவனம் விழிப்புணர்வு முகாம்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு குன்றத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பாக மருத்துவர்களால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,  குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் குழந்தை மருத்துவத்துறை சார்பாக மருத்துவர்களால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பள்ளியில்  பயிலும் வளர் இளம் பருவ மாணவிகளுக்கு ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் சுய மார்பக பரிசோதனை செய்யும் முறைப் பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

அப்பெட்டகத்தில் இரத்தசோகையை நீக்கும் மாதுளை மணப்பாகு நோய் எதிர்ப்பாற்றலை தரும் நெல்லிக்காய் இளகம், காயகல்ப மருந்தான திரிபலா சூரண மாத்திரை, பூப்பு  இயல்பாக நிகழ உளுந்தங் கஞ்சி மாவு மற்றும் சரும பொலிவிற்கான நலங்குமாவு முதலியவை அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவிகளுக்கு சுய மார்பக பரிசோதனை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி  விளக்கப்பட்டு செய்முறை செய்து காட்டப்பட்டது. மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

Related Stories: