முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 17 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 17 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடந்தது. அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை வலியுறுத்தி இந்த திருமணம்  நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை வகித்தார். நவாஸ் கனி எம்பி, எம்எல்ஏ அபுபக்கர் முன்னிலை வைத்தனர். இதில் முஸ்லிம் மத வழிபாடுபடி முஸ்லிம் மதத்தை சேர்ந்த 15 பேருக்கு திருமணம் நடந்தது. இந்து, கிறிஸ்தவ ஜோடிகளுக்கு அவர்களது முறைப்படி திருமணம் நடந்தது. திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரம் மற்றும் மளிகை பொருட்கள், மிக்சி, தங்க நாணயம் உள்ளிட்டவை தனித்தனியாக வழங்கப்பட்டது. இதில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Related Stories: