ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலன குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இருதய பரிசோதனை மைய பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலன குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இருதய பரிசோதனை மைய பேருந்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக சென்னை, மெட்ராஸ் ஆதித்யா ரோட்டரி கிளப் மற்றும் போரூர், ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இருதய பரிசோதனை மைய பேருந்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (08.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை நாள்தோறும் பெருகி வருகிறது. இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள சென்னை, மெட்ராஸ் ஆதித்யா ரோட்டரி கிளப் மற்றும் போரூர், ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இருதய பரிசோதனை மைய பேருந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பேருந்தில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் 2 டிஜிட்டல் இ.சி.ஜி.(Digital ECG), 2 எக்கோ (ECHO)  இயந்திரங்கள் மற்றும் தானியங்கி இரத்த மாதிரி கருவிகள் உள்ளன.  இந்தப் பேருந்து மூலம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமானது ஶ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தொழில்முறை இருதய நிபுணர், ஆய்வக நுட்புநர் கொண்டு நடத்தப்படும். பரிசோதனையின் போது மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஶ்ரீராமச்சந்திரா மருத்துவனைக்கோ அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுவார்கள்.

    

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் அருகில் நடைபெறும் போது, இம்மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், ஆளுங்கட்சித் தலைவர் ஆர்.இராமலிங்கம் நிலைக்குழுத் தலைவர்கள்  டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி), மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா, சென்னை, மெட்ராஸ் ஆதித்யா ரோட்டரி கிளப் மற்றும் போரூர், ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவன சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: