அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ள நிலையில் சில முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலசோனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. நாளையத்தினம் நடைபெறவிருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அதிமுக - பாஜக இடையே நடைபெற கூடிய சர்ச்சையில் அதிமுக எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறக்கூடிய இந்த கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை அடுத்து பொது செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை கட்சி ரீதியாக எடுக்கப்பட தேவை உள்ளது.

இதனையொட்டி அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து நாளை ஆலோசனை நடத்தி பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் அதிமுக - பாஜக இடையேயான சர்ச்சைகள் குறித்து தொடர்ந்து நீடிக்கிறது. பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக அதிமுகவில் இனைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் எவ்வாறு எதிர்வினையாற்றவேண்டும், பதிவு செய்யவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: