சென்னை: நாட்டின் வளர்ச்சி என்பது மகளிர் கைகளில்தான் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் 8 என்பது மகளிர் தினம் மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள். மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.