பீகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை அளித்தார்

சென்னை: வடமாநில தொழிலாளர் பிரச்னை தொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நேற்று டி.ஆர்.பாலு எம்பி சந்தித்து பேசினார். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை அளித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டிற்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்கு காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்னையை வைத்து, இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின்  பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில்  பரப்பப்பட்டு வரும் வதந்தி குறித்தும், அவர்களுக்கு தமிழ்நாட்டில்  வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், பீகார் முதல்வர்  நிதிஷ்குமாருக்கு அளித்த அறிக்கையை, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்டி.ஆர்.பாலு எம்.பி., நேற்று பாட்னாவில்  பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து அளித்தார்.

Related Stories: