ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக்க வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின் நுகவோர்களின் முழு விவரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ  மற்ற மின் இணைப்புகளை கண்டறியும் நோக்கிலும் மின் நுகர்வோர் தங்களது ஆதார்  எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம்  உத்தரவிட்டது. மேலும், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணிகள்  நிறைவுபெற்றுள்ளது. தற்போது, வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மின் நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்த பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் ஒரே குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாடகை வீடுகளில் வசிக்கும். இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சிலர் ஒரே வீட்டில் தனித்தனி குடும்பமாக வசிக்கலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை.

அந்த வீடுகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு  1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக உள்ள மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகிதப் பட்டியலாக இருக்க வேண்டும். இது தொடர்பாக மின் நுகர்வோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நோட்டீஸ் பெற்ற 15 நாட்களில் மாற்ற வேண்டும்.

Related Stories: