புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிகார் முதல்வரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு விளக்கம்

பாட்னா: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பீகார் மாநில முதல்வரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வேலைபார்த்து கொண்டிருக்கும் வடமாநிலத்தை புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் வதந்திகள் பெருமளவில் பரப்பப்பட்டு வருகிறது.

பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக பொய் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் அந்த மாநிலங்களில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஏற்கனவே பீகார் மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு என்பது தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பல மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை பாதுக்காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை எடுத்து கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு பாட்னா சென்று முதல்வர் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து அந்த கடிதத்திற் வழங்கினார். மேலும் தமிழகத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என அவர் விளக்கமளித்தார்.

Related Stories: