தனித்தமிழ் சொற்கள் அறிவோம் :பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட்

சென்னை: தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பிறமொழிகலப்பு சொற்களையும், அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

அவை பின்வருமாறு..

கலப்புச் சொல் - தமிழ்ச் சொல்,

உபயோகம்     -பயன்பாடு

சவால் -அறைகூவல்

வியாதி -நோய்

பிரபல -பெயர்பெற்ற; புகழ்பெற்ற

அகங்காரம் -செருக்கு

மனு -    விண்ணப்பம்

நகல் -      படி

மாமூல் -         வழக்கம்

சிபாரிசு -    பரிந்துரை

முகாம்  -      பாசறை

சங்கம் -  கழகம்

முடியாட்சி -  கோவரசு

சித்தாந்தம் - கோட்பாடு; கருத்தியல்

பஞ்சாங்கம் - ஐந்திரம்

சிங்கம் - அரிமா

சிநேகம் -நட்பு

சத்தியம் -வாய்மை

சர்வம் -எல்லாம்

அபிப்பிராயம் -எண்ணம்; கருத்து

துரிதம் -விரைவு; வேகம்

சாமர்த்தியம் - திறமை

சாந்தி - அமைதி

தருமம் - அறம்

உபவாசம் - நோன்பு; உண்ணாநிலை

சூரியன் - கதிரவன்; ஞாயிறு

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: