கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு: சத்தியபாண்டி கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி அத்துமீறல்..!!

கோவை: கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கோவையில் சாத்தியபாண்டி கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைதாகி இருந்த நிலையில், சரணடைந்த முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்ற நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து கொலை வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அச்சமயம் தான் துப்பாக்கியை ஓரிடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை எடுத்து தருவதாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால், காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா, உதவி ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, சந்திரசேகர், உதவியாளர் ஆனந்தகுமார், முதல்நிலை காவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்றுள்ளது. திடீரென எதிர்பாராத விதமாக விசாரணையின்போது ரவுடி சஞ்சய் ராஜா மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுள்ளார். பின்னர், துப்பாக்கி சூட்டில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், சஞ்சய் ராஜாவின் முழங்காலில் சுட்டுள்ளார்.

போலீஸ் சுட்டதில் முழங்காலில் காயமடைந்த கைதி சஞ்சய் ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பமுயன்ற சஞ்சய் ராஜாவை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கோவை ரவுடிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: