சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவச பரிசோதனை: 31ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை திட்டம் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 8ம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை பயனுள்ளவாறு கொண்டாடும் வகையில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையிலுள்ள அதன் 18 கிளைகளிலும், பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 31ம் தேதி வரை நடத்துகிறது. இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான தலைவர் சவுந்தரி கூறியதாவது: தன்னெதிர்ப்பு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுள் சுமார் 80% பெண்களே.  

தோல் அழிநோய், ரெய்ட்டர் நோய், சொரியாசிஸ், முடக்குவாதம், கருவிழிப்படல அழற்சி போன்ற தானியக்க நோய்களினால் ஏற்பட சாத்தியமுள்ள பல விளைவுகளுள் ஒன்றாக கண் அழற்சியும் இருக்கிறது.  தன்னெதிர்ப்பு நோய்களுள் ஒன்றான கிரேவ்ஸ் நோய், தைராய்டு ஹார்மோனின் மிகை உற்பத்தியை விளைவிக்கிறது. ஆண்களை விட அதிக அளவில் பெண்களையே இது பாதிக்கிறது.  1,00,000 பெண்களுள், 16 பேருக்கு தைராய்டு கண் நோய் இருக்கும் நிலையில், அதே அளவிலான ஆண்களில் 3 நபர்களுக்கு மட்டுமே அது ஏற்படுகிறது.

கருத்தரிப்பு காலத்தின்போது ஹார்மோன் மிகைப்பு, மெனோபாஸ் மற்றும் தானியக்க நோய்களுக்கு பாதிக்கக்கூடிய நிலை போன்ற பெண்களையே பிரத்யேகமாக பாதிக்கின்ற கண் நோய்கள் வரும் வாய்ப்பை குறைப்பதற்கு பெண்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மீது விழிப்புணர்வு திட்டங்களையும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தவிருக்கிறது.

சென்னையில் எங்களது மருத்துவமனையின் கிளைகள் அனைத்திலும் மார்ச் மாதம் முழுவதிலும் நடைபெறவிருக்கும் இந்த பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு திட்டம் ஆரம்ப நிலையிலேயே கண் குறைபாடுகளையும், நோய்களையும் கண்டறிந்து, உரிய சிகிச்சையின் மூலம் சிறப்பான பலன்பெற பெண்களை ஏதுவாக்கும் என்பது நிச்சயம். இதில் கலந்துகொண்டு பயன்பெற, முன்பதிவிற்காக 80809 99000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.  இவ்வாறு அவர் கூறியுனார்.

Related Stories: