இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக தனபாண்டியன் நியமனம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்கள் அடங்கிய தென்மண்டலத்திற்கான செயல் இயக்குநராக தனபாண்டியன் பொறுப்பேற்றுள்ளார். இவர், மனிதவளம் நிதி, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்து ஒப்பந்தங்கள், பத்திரத் தன்மை மற்றும் பாதுகாப்பு விமான சேவை, பராமரிப்பு- ஆய்வு தகவல் வழிமுறைகள், விலை நிர்ணயம், தரக்கட்டுப்பாடு மற்றும் கார்ப்ரேட் தகவல் தொடர்பு ஆகியவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு  மண்டல அளவில் பொறுப்பேற்று செயல்படுவதோடு, தென்மண்டல மாநிலங்களுக்கான  எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கான மண்டல அளவு  ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்தவர்.

Related Stories: