அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை ஆய்வுக் கூட்டம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் 2023-2024ம் ஆண்டிற்கான, புதிய அறிவிப்புகள் குறித்தும், 2021 - 2022 மற்றும் 2022 - 2023ம் நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  அறநிலையத்துறையின் சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது, அமைச்சர் சேகர்பாபு 2021- 22ம் ஆண்டில்  112 அறிவிப்புகளின் மூலம் 3,769 பணிகளும், 2022 - 23ம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணிகளும் மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குறிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் அறிவிக்கப்பட்டிருந்த 274 பணிகளின் முன்னேற்றத்தினையும் அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர்  சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள், தலைமைப் பொறியாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: