மாசி மாத பிரம்மோற்சவ விழா காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், குங்குமப்பூ மாலை மற்றும் பல்வேறு மலர்களால் மாலை அணிந்து, லட்சுமி, சரஸ்வதியுடன் வெள்ளி ரத உற்சவத்தில் எழுந்தருளி, மேள தாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில், ராஜ வீதிகள் மற்றும் கச்சபேஷ்வரர் கோயில் அருகே வான வேடிக்கையுடன் வலம் வந்த, காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி, கோயில் குளத்தில் தீர்த்தவாரி நேற்று மாலை  நடைபெற்றது. இதில், மங்கள வாத்தியங்களுடன், பக்தர்கள் படைசூழ காமாட்சி அம்மன் கோயில் குளத்தில்  முழுகி எழுந்தருளி பக்தர்களுக்கு கட்சியளித்தார். அப்போது, பக்தர்கள் அனைவரும் கோயில் குளத்தில் புனித நீராடி, சாமியை தரிசனம் செய்து சென்றனர். மேலும், நாளை மறுதினம் காலை விஸ்வரூப தரிசனம் மாலை விடையற்றி உற்சவத்துடன் நிறைவடைகிறது.

Related Stories: