கண்ணமங்கலம் அருகே கொளத்தூரில் ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் சுமார் 1,000 ஆண்டு பழமையான காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரர், காசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயம் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மகத்தன்று தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், வாணவேடிக்கை, கைலாய இசை வாத்தியங்கள் முழங்க ஸ்ரீசோமாஸ்கந்தர் அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது. தேரோட்டத்தை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிவ.கே.என்.சரவணன் தலைமையில் சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: