முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கூடப்பாக்கம் ஊராட்சியில் மருத்துவ முகாம், உதவிகள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கூடப்பாக்கம் 9 கிளைகளிலும் திமுக கொடியேற்றிவைத்து மருத்துவ முகாம் தொடக்க விழா மற்றும் அன்னதானம், இனிப்பு, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான டி.தேசிங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் பரமேஷ்வரி கந்தன், வார்டு நிர்வாகிகள் எஸ்.குணசேகரன், கே.என்.எஸ்.சுப்பிரமணி, சேட்டு, புதுராஜா, தனசேகர், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். சக்கரபானி, ஜி.பி.வி.நகராஜ், சி.சாம்பசிவம், எஸ்.தாஸ், வினேத்குமார், வெங்கடேசன், சாந்தகுமார், தீனாகுமார், ராஜேஷ், சந்தேஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு திமுக கொடியேற்றி வைத்தும் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும் பிரியாணி மற்றும் இனிப்பு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.இதில் ஒன்றிய அவைத் தலைவர் இ.கந்தபாபு, ஒன்றிய துணை செயலாளர் ச.அண்ணாகுமார், மாவட்ட பிரதிநிதிகள் பா.கந்தன், கட்டத்தொட்டி எம்.குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் ஜி.சி.சி.கருணாநிதி, துணை அமைப்பாளர் ஜி.பி.பரணிதரன், இ.வி.பி.பிரதீப், ஜி.பிரவின்குமார், மு.தே.ராஜேஷ், எஸ்.சர்மன்ராஜ் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: