செம்பனார்கோயில் அருகே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சிமென்ட் பாலம் சீரமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில்,மார்ச்6: செம்பனார்கோயில் அருகே சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சிமென்ட் பாலம் சீரமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே இளையாளூர் கிராமம், அறங்கக்குடி- இளையாளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள இ.ஏ.ஹெச் நகர் உள்ளது. இந்த நகரை இணைக்கும் வகையில் நரிக்குடி பாசன வாய்க்காலின் குறுக்கே சிறிய சிமென்ட் பாலம் உள்ளது.

இப்பகுதி மக்கள் மேற்படி பாலத்தின் வழியாக பிரதான சாலைக்கு வந்து தங்களது பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலத்தின் இணைப்பில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பாலம் சேதமடைந்ததால் பிரதான சாலையிலேயே இறக்கிவிட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் பக்கவாட்டின் இருபுறமும் தடுப்பு இல்லாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய அகலமான பாலத்தை கட்டித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: