குன்னூர் காட்டேரி பூங்காவில் கோடை சீசனுக்கு 1.70 லட்சம் மலர் விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கியது

குன்னூர்: குன்னூர் காட்டேரி பூங்காவில் இவ்வாண்டு கோடை சீசனுக்கு 1.70 லட்சம் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. ஜெர்மன், பிரான்ஸ், நெதர்லாந்து, காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் விதைகளை நடவு செய்யப்பட்டு வருகின்றனர்.  

மலை மாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா உள்ளது. இந்த பூங்கா தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இயற்கை சூழலில் இந்த பூங்கா 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிலிருந்து பார்க்கும் போது எதிரே பச்சை கம்பளம் போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியும் காண்போரின் கண்களை குளிர்ச்சியாக்கும்.

இங்கு ஏப்ரல், மே மாதத்தில் முதல் சீசனும், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 2-வது சீசனும் நிலவி வருகிறது.  இந்த 2 சீசன்களிலும் சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்களில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.  குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் காட்டேரி பூங்கா உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனால் இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.  அதன்படி 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி  தொடங்கியது. இந்த பணியை தோட்டக்கலைத்துறையினர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மலர் நாற்றுகளை நட்டனர். இதில் பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆன்டிரினம், கோணியா, பால்சம், பெகோணியா, டையாந்தஸ், சால்வியா, குட்டை ரக சால்வியா, ஜினியா, டெல்பினியம், பிரான்ச் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மேரி கோல்ட் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

இதில் 30-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம், பிரிமுளா உள்பட 30 வகை ரகங்களை கொண்ட மலர் நாற்றுகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம்  மலர் செடிகளை  பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது.

Related Stories: