சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், தொண்டைவலி, உடல் சோர்வு போன்றவைகளால் அதிகமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.
