புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் வதந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு: துரை வைகோ வலியுறுத்தல்

சென்னை:  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக வதந்தி பரப்புவோர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியை கிளப்பி உள்ளனர். கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முயற்சியால் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இது மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உள்ளது.

வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும், இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்குமான முயற்சியாகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்ட முயற்சிக்கும் தமிழ்நாட்டில் உள்ள தனிநபர்கள் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: