சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக. வதந்தி பரப்பியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
