விவசாயிகளின் வாழ்வை நானோ யூரியா எளிதாக்கும்: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ``நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில்   மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நானோ யூரியா ஒரு பகுதியாகும். இந்த நானோ யூரியா விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும்,’’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: