பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் அதிகமுகவில் ஈபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்

சென்னை: தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா என ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் அதிகமுகவில் ஈபிஎஸ் முன்னிலையில் இணைந்தார். என்னால் முடிந்தவரை பல சங்கடங்களை கடந்து ஒன்றரை ஆண்டுகளாக பயணித்தேன். உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என நிர்மல்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மாயஉலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்ததை என்றும் உணரமுடியாது. தொண்டர்கள், கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும் என்றும் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Related Stories: