மார்ச் 8,9 தேதிகளில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மார்ச் 8,9 தேதிகளில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் றண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 8,9 தேதிகளில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: