சென்னை: சென்னை மாநகர கூடுதல் அரசு பிளீடர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகியோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி தொடர்பான சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு பிளீடராக ஷாஜகானும் கூடுதல் அரசு பிளீடராக வீரமணியும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் ஒரு கூடுதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் டி.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
