அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டு சிறை: பெலாரஸ் நீதிமன்றம் அறிவிப்பு

டாலின்: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட நோபல் பரிசு பெற்ற அலெஸ் பெலியட்ஸூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராகவும்,  மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான சமூக  ஆர்வலரும், கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அலெஸ்  பெலியட்ஸூக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் இருந்தன.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பான போராட்டங்களில் அலெஸ் மற்றும் அவரது இரண்டு  உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற அலெஸ் பெலியட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட அலெஸ் மற்றும் அவரால் நிறுவப்பட்ட வியன்னா மனித உரிமைகள் மையத்தைச் சேர்ந்த மற்ற மூன்று பிரமுகர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

Related Stories: