கர்நாடகா: கர்நாடகாவில் ஊழல் புகாரில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட்ட முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். தாவணகெரே மாவட்டம் சென்னகிரி எம்.எல்.ஏ வாக இருந்த விருப்பக்ஷாவின் மகன் பிரஷாந்த் மாதல் இவர் சமீபத்தில் ரசாயன பொருட்கள் வாங்கும் டெண்டரை ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்குவதற்காக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் ஆயுக்தா போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். பின்னர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக சுமார் ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
