வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது என மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: