ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: சமூக வலைத்தள செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் நேற்று தான் பிறந்த நாள்  கொண்டாடினார். ஆனால்  அதற்குள்ளாக இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: