சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, முகமது சபீக், பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், சத்தியநாராயண பிரசாத் ஆகியோரை நியமனம் செய்து கடந்த 2021ல் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். கூடுதல் நீதிபதிகளுக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 5 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். இந்த 5 நீதிபதிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் திங்கட்கிழமை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
