தற்போதைய முதல்வருக்கு வாய்ப்பு மறுப்பு; திரிபுராவுக்கு பெண் முதல்வரா?.. பாஜக தலைமை தீவிர ஆலோசனை

டெல்லி: திரிபுராவில் முதன் முறையாக பெண் ஒருவரை முதல்வராக பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. திரிபுராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாக அம்மாநில முதல்வர் மாணிக் சஹாவின் மிகப்பெரிய பங்கு என்று கூறுகின்றனர். அவரே இந்த முறையும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசிய தலைமை புதிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக ஊகங்கள் எழுந்துள்ளன. திரிபுரா மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘திரிபுரா மாநில முதல்வர் பதவிக்கு ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக்கின் பெயரை பாஜக தலைமை பரிசீலித்து வருகிறது. அவ்வாறு பெண் முதல்வரின் பெயரை தலைமை அங்கீகரித்தால், அது வடகிழக்கு மாநில வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை முதல்வராக்கிய பெருமை பாஜகவை சென்றடையும். பிரதிமா பவுமிக் முதல்வராக்கப்பட்டால், மாணிக் சஹா ஒன்றிய அமைச்சராக வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.

Related Stories: