திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய 2,600 டன் யூரியா ரயிலில் வருகை: கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்தவதற்காக, 2,600 மெட்ரிக் டன் யூரியா நேற்று சரக்கு ரயிலில் வந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், பருவமழை கை கொடுத்ததால், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. எனவே, சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல் சாகுபடி மாவட்டம் முழுவதும் பரவலாக நடந்து வருகிறது.

எனவே, விவசாய தேவைக்கான யூரியா  தேவை அதிகரித்திருக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதையொட்டி, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு 2,600 மெட்ரிக் டன் யூரியா வந்தது. அதனை, லாரிகள் மூலம் ஏற்றிச் சென்று குடோனில் இருப்பு வைக்கும் பணி நேற்று நடந்தது.

Related Stories: