அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டு

மதுரை: அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். பழனிசாமியின் ஆணவம், திமிர்தான் தோல்விக்கு காரணம் எனவும் இரைட்டை இல்லை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். பல கோடி செலவழித்தும் படுதோல்வியால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேசமயம், தேர்தலில் பங்கேற்காத ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோல்விக்காக எடப்பாடி மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கு பின்பும் தோல்விக்கு யார் காரணம் என்ற சண்டை பாஜ மற்றும் அதிமுக இடையே தொடர்ந்து வருகிறது. அது, இந்த தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது. இந்த படுதோல்விக்கு எடப்பாடிதான் காரணம் என அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி குறித்து மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;  

அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம், பழனிசாமியின் ஆணவம், திமிர்தான் தோல்விக்கு காரணம், இரைட்டை இல்லை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும், பழனிசாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை கட்சி மிகவும் பலவீனம் அடையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Related Stories: