ராமநாதபுரம் : கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 2,408 பக்தர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இரு நாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனாவால் கடந்த 2020, 2021ல் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூஜை செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து மிகவும் குறைவான பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
