நீதி கேட்டு விவசாயிகள் டெல்லிக்கு நெடும் பயணம்

கன்னியாகுமரி: ஒன்றிய  அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்ட திருத்தம் கைவிடப்பட்டது. தொடர்ந்து  விவசாயிகள் விடுத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி  உறுதியளித்தார்.  ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்து  தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்  கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நீதி  கேட்கும் நெடும் பயணத்தை நேற்று காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினர். இந்த பயணத்தை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ  தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வாகனங்கள் மூலம் பல  மாநிலங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து வரும் 20ம் தேதி  டெல்லியை அடைகின்றனர்.

Related Stories: