காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்:ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கும்பகோணம்: ‘பொது மக்களை கடுமையாக பாதிக்கும் காஸ் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்’ என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: மீனவர் பிரச்னைகளில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு, இந்திய மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காஸ் விலை உயர்வு பொது மக்களை கடுமையாக பாதிக்கும். காஸ் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றாலும், பாஜ வெற்றி பெறுவதற்கான நல்ல சூழல் இருந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் இப்போது நடைபெற்ற 3 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: