சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி கோப்பை’ பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 2 மற்றும் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில், தளபதி கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி துவக்க விழா நேற்று காலை நடந்தது.விழாவிற்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி தலைமை தாங்கினார். போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
- தலப்பதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகள்
- திமுக விளையாட்டுக்கழக அபிவிருத்திக் குழு
- அமைச்சர்
- உதயநிதி