ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ரூ.67 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ரூ.67 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கலாநிதி வீராசாமி எம்.பி. வழங்கினார். சென்னை ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை பல ஆண்டுகளாக பொதுமக்களுக்காக சிறந்த சேவையை வழங்கி வருகிறது. மருத்துவமனை நிர்வாகம், இங்கு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற கோரிக்கையை  வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் வைத்தனர்.

இதையடுத்து, மருத்துவ நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்று மணலி சி.பி.சி.எல். நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூ.67 லட்சம் மதிப்பில் அல்ட்ரா சவுண்ட் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு எம்.பி. கலாநிதி வீராசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர்  பாலாஜி, சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் பகுதி திமுக செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், கவுன்சிலர் கீதா சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: