சென்னையில் 10 மண்டலங்களில் 370 உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஒப்புதல்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 370 உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் கூடியது.  கூட்டம் தொடங்கியதும் துருக்கியில் நில நடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மொத்தம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: சென்னை மாநகராட்சியில் 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்து இயக்குதல் மற்றும் மாற்றம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பொது தனியார் கூட்டாண்மை முறையில் புதுப்பித்தல் மற்றும் பராமரிக்கப்படுகிறது. புவிசார் தொழில்நுட்பம் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களை டிரோன் மூலமாகவும், வீடுவீடாக சென்று சீராய்வு செய்யப்பட்டதில் அளவீடு உபயோகத்தன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்களை அளவீடு செய்து வருவாய் பெருக்க குறைந்த விலைப்புள்ளி (5 கோடி) அளித்த நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 1, 2, 3, 4, 6, 10, 12, 13, 14, 15 மண்டலத்தில் 370  உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 17 சிற்பங்களுக்கான 30 தாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் மண்டலம் ஒன்று முதல் 15 வரை 300 எண்ணிக்கையிலான உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 30 ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 1, 2, 3, 5, 11, 13 மற்றும் 14ல் 233 எல்லைக்குள் ஆன உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 20 சிற்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்படுகிறது. அத்துடன் மண்டலம் 3, 4, 6, 8, 9, 10,1 3 மற்றும் 15ல் 34 எண்ணிக்கையிலான பேருந்து தடை சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 13 சிற்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* ‘குப்பை இல்லாத சென்னை’ சாத்தியமா?

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். 12வது வார்டு கவுசிலர் கவி கணேஷ் (திமுக): ‘குப்பை இல்லாத சென்னை’ என்ற நிலை வர வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக பதவி வகித்த போது அவரது ஆசையாக இருந்தது. அதற்கான  நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது அதை செயல்படுத்துவதற்கான முயற்சி எடுத்தார். அதன்பின் 2011 முதல் அதிமுக அரசு அதை செய்ய தவறி விட்டது. ‘குப்பை இல்லாத சென்னை’ என்பது சாத்தியம் இல்லை என்று பலர் விமர்சிக்கின்றனர். அதை சாத்தியப்படுத்தும் வகையில் எனது வார்டில் அதை அமல்படுத்தி உள்ளேன். இதை சென்னை மாநகராட்சி மண்டலங்களில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13வது வார்டு கவுன்சிலர் சுசீலா (திமுக): மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி  அதிகரிக்கிறது. லாரி மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் முழுவதுமாக செல்லாமல் தேங்கி உள்ளது. எனவே கொசுவால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேயர் பிரியா: இதுகுறித்து வட்டார துணை ஆணையர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை  எடுக்கப்பார்.

Related Stories: