முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து சிறைகளிலும் 700 மரக்கன்று நடும் திட்டம்: புழல் சிறையில் 70 மரக்கன்று டிஜிபி அம்ரேஷ் புஜாரி நட்டார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் 700 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக புழல் மத்திய சிறையில் 70 மரக்கன்றுகளை சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சிறைத்துறையில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள புழல், கடலூர், பாளையங்கோட்டை என 9 மத்திய சிறை, 5 மகளிர் சிறை, ஒரு பார்ஸ்டல் பள்ளி ஆகிய 15 சிறைகளில் 700 மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.

புழல் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி முதல்வர் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 மரக்கன்றுகளை சிறை வளாகத்தில் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். சிறையில் நடப்பட்ட ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் சிறைவாசிகளின் பெயரிடப்பட்டு, அவர்களே வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் மொத்தம் 700 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டது.  புழல் மத்திய சிறையில் நடந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜி முருகேசன், தலைமையிட டிஐஜி கனகராஜ், மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் சிறை அலுவலர் உடனிருந்தனர்.

Related Stories: