இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பாக். நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்அரசு பரிசுப் பொருள்களை தோஷகானா எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தோஷகானா வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, மற்ற இரண்டு வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதி ஜாபர் இக்பால், தோஷகானா வழக்கில், இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இதையடுத்து, இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படும் சூழல் பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: