சென்னை: தொன்மையான 146 திருக்கோயில்களில் திருப்பணிகளை தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (28.02.2023) மாநில அளவிலான 52-வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, அருள்மிகு ஜனமுக்தீஸ்வரர் திருக்கோயில், சுவாமிமலை, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம், அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் நகர், அருள்மிகு சொக்கலிங்க சுவாமி திருக்கோயில், ஆழ்வார்திருநகரி, அருள்மிகு மாதாங்கோயில் திருக்கோயில், தென்காசி மாவட்டம், தென்காசி, காமராஜ் நகர், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், அரியலூர் மாவட்டம், இடைக்கட்டு, அருள்மிகு ஆனந்தாயி அம்மன் திருக்கோயில், உடையார்பாளையம், அருள்மிகு விநாயகர் திருக்கோயில், சேலம் மாவட்டம், சூரமங்கலம், அருள்மிகு மாரியம்மன், விநாயகர் திருக்கோயில், செவ்வாய்பேட்டை, அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், தருமபுரி மாவட்டம், மோட்டுப்பட்டி, அருள்மிகு செங்காளியம்மன் பட்டாளம்மன் திருக்கோயில், பென்னாகரம், அருள்மிகு சென்றாய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அருள்மிகு வெங்கலப்பள்ளி கருப்பண்ணசுவாமி திருக்கோயில், கொடுமுடி, அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், மோகனூர், அருள்மிகு புன்னைவனநாதர்சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பாங்குழி. அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார், அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், திருவறும்பூர் இரயிலடி, அருள்மிகு பக்த ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 146 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் சா.பாலமுருகன், ஆகம வல்லுநர்கள் முனைவர் கே.பிச்சை குருக்கள், அனந்த சயன பட்டாச்சாரியார், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, கட்டமைப்பு வல்லுநர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.